TNPSC Thervupettagam

நொதிகள் கத்தரிப்பான்

April 5 , 2019 2062 days 715 0
  • உயிரணு மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தைச் (CCMB - Centre for Cellular & Molecular Biology) சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பாக்டீரியாக்களின் செல் சுவர்களை உடைப்பதில் உதவுகின்ற ஒரு புதிய “முரெய்ன் பெப்டிடயாஸ்” என்ற நொதியைக் கண்டுபிடித்துள்ளனர்.
  • இது ஏற்கெனவே உள்ள நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகள் மூலமாக பாக்டீரியா எதிர்ப்பு விளைவுகளைத் தடுக்கும் ஒரு புதிய மருந்து விநியோக வழியை வழங்குகிறது.
  • நொதிகள் கத்திரிப்பான் என்பது பாக்டீரியாக்களில் உள்ள செல் சுவர்களின் வளர்ச்சியை ஒழுங்குபடுத்தும் ஒரு நொதியாகும்.
  • மருந்து விநியோகத்தின் இந்த முறையானது “நொதிகள் கத்திரிப்பான்” செயல்படுவதிலிருந்து அதனைத் தடுக்கின்றது.
  • இதற்கு மாறாக பென்சிலின் போன்ற நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் பாக்டீரியாவின் செல் வளர்ச்சியைத் தடுக்க செல்கள் கூட்டிணைப்பின் இறுதி நிலையை மட்டுமே குறி வைக்கின்றன.
  • நொதிகளைத் தடுப்பதன் மூலம் நுண்ணுயிரிகளைத் தாக்க ஒரு புதிய வழியை ஏற்படுத்த முடியும். மேலும் இது நோய் எதிர்ப்பு மருந்துகளின் உற்பத்தியில் புதிய தாக்கத்திற்கு வழிவகுக்கும்.
CCMB
  • CCMB ஆனது நவீன உயிரியல் மற்றும் உயிரியல் துறைகளுக்கு இடையே ஒழுங்குபடுத்தப்பட்ட எல்லைப் பகுதிகளில் உயர்தர அடிப்படை ஆராய்ச்சி மற்றும் பயிற்சிகளை நடத்துகின்றது.
  • ஹைதராபாத்தை மையமாகக் கொண்ட இந்த நிறுவனமானது 1977 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இது அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் குழுவின் கீழ் இயங்குகின்றது.
  • இது யுனெஸ்கோவின் உலகளாவிய மூலக்கூறு மற்றும் செல் உயிரியல் அமைப்பினால் “சிறப்புமிகு மையமாக” தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்