புதுப்பித்தல் மற்றும் மறுசீரமைப்புப் பணிகளின்போது “பாரீசின் நமது பெண்மணி” என்று பொருள்படும் பாரீசின் நோட்ரி டேம் தேவாலயத்தில் தீ பற்றிக் கொண்டது. இதனால் அது குறிப்பிடத்தக்க அளவில் சேதத்தையும் கண்டது.
சேதாரங்கள் ஒட்டு மொத்த கூரை மற்றும் முக்கிய கூம்புப் பகுதியின் தகர்வையும் உள்ளடக்கியதாகும்.
பிரெஞ்சு கோதிக் கட்டிடக் கலை முறையின் ஒரு மிகச் சிறந்த மாதிரியாக இந்த தேவாலயம் கருதப்படுகின்றது.
இதன் கட்டுமானம் 1160 ஆம் ஆண்டில் பிஷப் மௌரைஸ் டி சுல்லி என்பவரது தலைமையில் தொடங்கப்பட்டு 1260 ஆம் ஆண்டு வாக்கில் பெருமளவில் கட்டி முடிக்கப்பட்டது. இருந்தாலும் பின்தொடர்ந்து வந்த நூற்றாண்டுகளில் இது அடிக்கடி புனரமைக்கப்பட்டது.
இந்தத் தேவாலயத் தளம் பிரான்சின் மன்னர் என்ற முறையில் நெப்போலியன் தி கிரேட் என்ற மன்னரின் முடிசூட்டு விழா நடந்த தளமாகும்.
1831 ஆம் ஆண்டில் தேவாலயத்தின் புதுமையான கட்டமைப்பைப் பாதுகாப்பதற்கான விழிப்புணர்வைப் பரப்பிட வேண்டி விக்டர் ஹியூகோவின் புகழ்பெற்ற நாவலான “நோட்ரி டேமின் கூன்முதுகு” (The Hunchback of Notre-Dame) என்ற புதினம் எழுதப்பட்டது.