நார்வேயைச் சேர்ந்த குடியேற்றத்திற்கு எதிரான அரசியல்வாதிகள் அணு ஆயுத ஒழிப்பைப் பற்றி விவாதிக்க வடகொரிய அதிபர் கிம்ஜோங் உன்னுடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏற்படுத்திய வரலாற்றுப் பூர்வ சந்திப்பின் காரணமாக அவரை நோபல் அமைதிப் பரிசிற்கான பட்டியலில் முன்மொழிந்துள்ளனர்.
இந்த முன்மொழிவு அடுத்தப் பரிசிற்கான காலக்கெடுவைத் தாண்டியுள்ளதால் இவரது பெயர் 2019-ம் ஆண்டு விருதுப் பட்டியலுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.
2018ம் ஆண்டின் விருதுக்கு சாதனை அளவாக 330 நபர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.
வடகொரியாவைப் பல வருடங்களாக ஆட்சி புரிந்து கொண்டிருக்கும் கிம்மின் குடும்ப உறுப்பினர்களையோ அல்லது கிம்மையோ அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து கொண்டு சந்திக்கும் முதல் அதிபர் டிரம்ப் ஆவார்.
கடந்த காலங்களில் இதற்கு முன் முன்மொழியப்பட்ட பட்டியலில் ரஷ்ய அதிபர் விளாடிமீர் புதின் மற்றும் முன்னாள் கியூபா நாட்டின் தலைவர் பிடல் காஸ்ட்ரோ ஆகிய பெயர்களோடு தற்போது டிரம்பின் பெயரும் முன்மொழியப்பட்டுள்ளது.