2018-ஆம் ஆண்டின் இந்திய நோபல் பரிசுத் தொடரை கோவாவில் நடத்த கோவா மாநில அரசானது மத்திய உயிர்த் தொழிற்நுட்பத்துறை, மத்திய அறிவியல் மற்றும் தொழிற்நுட்ப அமைச்சகம், மற்றும் சுவீடனின் நோபல் ஊடகம் ஆகியவற்றுடன் ஓர் முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
இந்த பெரும் நிகழ்வானது சுவீடனின் நோபல் அருங்காட்சியகத்திலிருந்து கொண்டு வரப்படும் பொருட்களால் நடத்தப்படும் ஒரு மாதக் கண்காட்சியோடு இணைந்து நடத்தப்படும்.
சுவீடன் நோபல் மீடியா, மத்திய அறிவியல் மற்றும் தொழிற்நுட்ப அமைச்சகம், அறிவியல் மற்றும் தொழிற்நுட்பத் துறை அமைச்சகத்தோடு இணைந்து மத்திய உயிர் – தொழிற்நுட்பத் துறையால் இத்தொடர் நடத்தப்படுகிறது.
மக்களை தொழிற்நுட்ப கல்வி அல்லாமல், அச்சு அசலான அறிவியல் (Pure Science) பாடக் கல்வியை நோக்கி அழைத்து வருவதற்காக இத்தொடர் நடத்தப்படுகிறது.
இதற்கு முன் இந்நோபல் பரிசுத் தொடர் குஜராத்தில் நடத்தப்பட்டுள்ளது.