TNPSC Thervupettagam
October 14 , 2022 647 days 340 0
  • பென் S. பெர்னான்கே, டக்ளஸ் W. டயமண்ட் மற்றும் பிலிப் H. டிப்விக் ஆகியோர் வங்கிகள் மற்றும் நிதி நெருக்கடிகள் குறித்த ஆராய்ச்சிக்காக 2022 ஆம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை வென்றுள்ளனர்.
  • இவர்களின் இந்த நவீன வங்கியியல் ஆராய்ச்சி என்பது, வங்கிகள் ஏன் உள்ளன, நெருக்கடிகளில் அவற்றை எவ்வாறு குறைவான தாக்கத்துடன் மீளச் செய்வது மற்றும் வங்கியின் வீழ்ச்சிகள் எவ்வாறு நிதி நெருக்கடிகளை அதிகப்படுத்தச் செய்கின்றன என்பதைத் தெளிவுபடுத்துகிறது.
  • 1980 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் பென் பெர்னான்கே, டக்ளஸ் டயமண்ட் மற்றும் பிலிப் டைப்விக் ஆகியோரால் இந்த ஆராய்ச்சியின் தொடக்கமானது நிறுவப்பட்டது.
  • நிதிச் சந்தைகளை ஒழுங்குபடுத்துவதிலும் நிதி நெருக்கடிகளைக் கையாள்வதிலும் அவர்களின் பகுப்பாய்வுகள் மிகப்பெரிய அளவில் நடைமுறை சார்ந்த முக்கியத்துவம் வாய்ந்தவை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்