TNPSC Thervupettagam
December 23 , 2023 210 days 254 0
  • உலக சுகாதார அமைப்பு ஆனது, நோமா நோயினை (கடைவாய் அழுகல் நோய்) புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்கள் (NTD) என்ற அதன் அதிகாரப்பூர்வ  பட்டியலில் சேர்த்துள்ளது.
  • நோமா நோய் ஆனது, வாயழுகல் அல்லது அழுகிய வாயழல் என்றும் அழைக்கப் படுகிறது.
  • இது தோராயமாக 90 சதவீத இறப்பு விகிதத்துடன், வாய் மற்றும் முகத்தில் ஏற்படும் கடுமையான தசையழுகல் நோயாகும்.
  • இது தீவிர வறுமை, ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் சுகாதாரம் மற்றும் வாய்வழி சுகாதாரத்திற்கு முறையான அணுகல் இன்மை போன்றவற்றுடன் தொடர்புடையது.
  • நோமா நோய் ஆனது முதன்மையாக 2 முதல் 6 வயதுடைய குழந்தைகளைப் பாதிக்கிறது மற்றும் ஏழ்மை நிலையில் உள்ள சமூகத்தினர் மத்தியில் பொதுவாகக் காணப் படுகிறது.
  • உலக சுகாதார அமைப்பின் இணையதளமானது, ஆண்டிற்கு சுமார் 140,000 நோய் பாதிப்புகள் பதிவாகுவதாகவும் சுமார் 770,000 வழக்குகள் பரவிக் காணப்படுவதாகவும் மதிப்பிடுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்