நோயாளிகளின் உரிமைக்கான சாசன வரைவு
September 5 , 2018
2278 days
642
- மத்திய சுகாதார மற்றம் குடும்பநல அமைச்சகமானது, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் தயாரிக்கப்பட்ட நோயாளிகளின் உரிமைக்கான சாசன வரைவை வெளியிட்டுள்ளது.
- அமைச்சகமானது, முறையான சுகாதாரப் பாதுகாப்பு வழங்குவதற்காக நோயாளிகளின் உரிமைக்கான சாசன வரைவை மாநில அரசாங்கத்தின் மூலம் அமல்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
- இந்தச் சாசனமானது, திடமான வழிமுறைகளை உருவாக்க, மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு வழிகாட்டு ஆவணமாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Post Views:
642