நோயாளிக்கான இந்தியாவின் முதல் பேசும் கருவி - அன்யா
December 3 , 2018 2184 days 628 0
மருத்துவத்தில் உறுதி செய்யப்பட்ட தகவல்களை சுகாதாரம் சார்ந்த வினவல்களுக்கு வழங்குவதற்காக ‘அன்யா’ எனும் இந்தியாவின் முதல் பேசும் கருவியை மருந்தியல் நிறுவனமான லூபின் அறிமுகப்படுத்தியுள்ளது.
இது பெங்களூருவில் நடைபெற்ற நீரிழிவு ஆராய்ச்சிக்கான ஆய்வு மன்றத்தின் 46-வது வருடாந்திர கூடுகையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
நோய் மேலாண்மையின் ஒரு பகுதியாக, உடல்நலம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் குறித்த தகவல்களுடன் நோயாளிகளுக்கு உதவி செய்வதற்கென இந்த அன்யா பேசும் கருவியானது பயிற்சியளிக்கப்பட்டுள்ளது.
சமஸ்கிருத மொழியில் அன்யா என்ற சொல்லுக்கு வற்றாத அல்லது எல்லையற்ற என்று பொருளாகும்.