TNPSC Thervupettagam

நோயெதிர்ப்புச் சக்தியிலிருந்துத் தப்பிக்கும் கொரோனாவின் புதிய வடிவம்

April 27 , 2021 1308 days 720 0
  • நோயெதிர்ப்புச் சக்தியிலிருந்துத் தப்பிக்கும் கோவிட்-19 வைரசின் புதிய வடிவமானது மேற்கு வங்காளத்தில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
  • இந்தப் புதிய SARS – COV2 என்ற வடிவமானது ஒரு நபர் இதற்கு முன்பு வைரசினால் பாதிக்கப்பட்டிருந்தாலும் அந்த வைரசிற்கு எதிரான ஆன்டிபாடிகளைக் கொண்டே இருந்தாலும் அந்த நோயெதிர்ப்புச் சக்தியிலிருந்து விடுபட்டு அந்நபருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறப்பட்டுள்ளது.
  • இந்தத் தன்மை மாறிய வைரஸ் ஆனது கோவிட்-19 வைரசின் இரட்டை மாறுபாடு வடிவத்தை ஒத்துள்ளது.
  • இது இந்தியாவின் 18 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் குறிப்பாக மஹாராஷ்டிராவில் கண்டறியப்பட்டு உள்ளது.
  • மகாராஷ்டிராவில் எடுக்கப்பட்ட 15-20% மாதிரிகளில் இவ்வடிவ வைரஸ் கண்டறியப் பட்டுள்ளது.
  • B.1.618 எனப்படும் கொரோனா வைரசின் புதிய வடிவம் ஆனது நோயெதிர்ப்பு சக்தியிலிருந்துத் தப்பிக்கும் புதிய வடிவ கொரோனா வைரஸ் ஆகும்.
  • இது E484K உள்ளிட்ட ஒரு மாறுபட்ட மரபணு வடிவ தொகுதியாக வகைப்படுத்தப்  பட்டுள்ளது.
  • மேற்கு வங்காளத்தில் B.1.618 வகையின் விகிதம் கணிசமாக அதிகரித்து வருவதாக அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்