இந்திய வானியற்பியல் கழகத்தின் (IIA) வானியலாளர்கள், அண்மையில் இருக்கும் ஆண்ட்ரோமேடா அண்டத்தில் உள்ள நோவாவிலிருந்து முதன்முறையாக தொலைதூர புற ஊதா (FUV) உமிழ்வினைச் சமீபத்தில் கண்டறிந்துள்ளனர்.
நோவா என்பது பல வாரங்கள் அல்லது மாதங்களில் மிக மெதுவாக மங்குகின்ற ஒரு பிரகாசமான, நன்கு வெளிப்படையாக புதிதாக உருவாகின்ற நட்சத்திரத்தின் திடீர் தோற்றத்தை ஏற்படுத்துகின்ற ஒரு நிலையற்ற வானியல் நிகழ்வாகும்.
FUV என்பது 200 முதல் 280 நானோ மீட்டர் வரையிலான அலைநீளங்களைக் கொண்ட புற ஊதா கதிர்வீச்சின் அலை அலைவரிசையைக் குறிக்கும் ஒரு கதிர்வீச்சு ஆகும்.