TNPSC Thervupettagam

பகுதியளவு மீக்குளிர் நிலையிலான இயந்திரம்

May 15 , 2024 193 days 218 0
  • மகேந்திரகிரியில் உள்ள ஒருங்கிணைந்த பகுதியளவு மீக்குளிர் நிலை இயந்திர சோதனை மையத்தில் (SIET) SCE-200 (பகுதியளவு மீக்குளிர் நிலையிலான இயந்திரம் -200) இயந்திரத்திற்கான முதல் தீப்பற்றல் சோதனையை இஸ்ரோ மேற்கொண்டது.
  • பகுதியளவு மீக்குளிர் நிலையிலான இயந்திரம் தீப்பற்றல் செயல்முறையானது ட்ரை எதில் அலுமினியம் மற்றும் ட்ரைஎத்தில் போரான் ஆகியவற்றின் ஒரு கலவையைப் பயன்படுத்துகின்ற ஒரு தொடக்க உட்செலுத்துக் குழாயினைப் பயன்படுத்தி மேற் கொள்ளப் படுகிறது.
  • இது இஸ்ரோவில் முதல் முறையாக 2000 kN பகுதியளவு மீக்குளிர் நிலையிலான இயந்திரத்தில் பயன்படுத்தப்படுகிறது.
  • SCE-200 என்பது இஸ்ரோவின் திரவ உந்துவிசை அமைப்புகள் மையத்தினால் (LPSC) உருவாக்கப்பட்ட 2MN உந்துதல் ரக திரவ ஏவுகல இயந்திரம் ஆகும்.
  • இந்த அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்திலான ஏவுகல இயந்திரம் ஆனது, இஸ்ரோவின் ஏவு வாகனம் மார்க்-III ஏவுகலம் மற்றும் பிற எதிர்கால ஏவு வாகனங்களின் விண்வெளிப் பொருட்களின் சுமந்து செல்லும் திறனை மேம்படுத்தச் செய்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்