TNPSC Thervupettagam

பங்கபந்து விண்கலம் – 1

May 16 , 2018 2384 days 741 0
  • வங்கதேச நாட்டின் முதல் தொலைத் தொடர்பு விண்கலமான பங்கபந்து விண்கலம் – 1 ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கான் 9 வகை ராக்கெட் மூலம் (Falcon 9 rocket) கென்னடி விண்வெளி ஏவுமையத்தின் ஏவு வளாகம் 39A-விலிருந்து (39A Launch Complex) ஏவப்பட உள்ளது.
  • இந்த விண்கலமானது, வங்கதேசம் முழுவதும் ஒளிபரப்பு மற்றும் தொலைத் தொடர்பு சேவைகளை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • இவ்விண்கலம், பிரான்கோ–இத்தாலியன் விண்வெளி உற்பத்தியாளரான தாலெஸ் ஸ்பேஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.

   

  • வங்கதேசத்தின் தேசத்தந்தையான பங்கபந்து ஷேக் முஜிபூர் ரஹ்மானின் பெயர் இவ்விண்கலத்திற்கு சூட்டப்பட்டுள்ளது.
  • இவ்விண்கலம், வங்கதேச மக்களுக்கு இணைய இணைப்பு வசதி, கைப்பேசி சேவைகள், ரேடியோ, பேக்ஹால் (வீடியோ), DTH தொலைக்காட்சி சேவைகள் மற்றும் பிற தொலைத்தொடர்பு தொடர்பான சேவைகள் ஆகியவற்றை வழங்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்