கோப்பல் மாவட்டத்தில் பங்கப்பூரில் உள்ள வறண்ட நிலங்களில் முதல் முறையாக ‘ஓநாய் சரணாலயம்’ ஒன்றை அமைக்க கர்நாடக மாநில வனவிலங்கு வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியச் சாம்பல் நிற ஓநாய் ஆனது மித வறட்சி மற்றும் வறட்சியான பகுதிகளில் வாழ்கின்ற சாம்பல் ஓநாய் என்ற ஒருவகை இனத்தைச் சேர்ந்ததாகும்.
இது தக்காணப் பீடபூமியின் வறண்ட புல்வெளிப் பகுதிகளில் வாழ்கிறது.