வங்கதேசம் மற்றும் மியான்மரில் வடகிழக்கு இந்தியாவின் வேளாண் உற்பத்திப் பொருட்களை ஊக்குவிப்பதற்காக வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு வாரியம் (APEDA- Agricultural and Processed Food Products Export Development Authority ) ஊக்குவிப்பு திட்டத்தை துவங்கியுள்ளது.
டாக்கா மற்றும் யாங்கூனில் முறையே உள்ள இந்திய உயர் ஆணையம் மற்றும் தூதரகத்தின் ஒத்துழைப்புடன் APEDA வங்கதேசம் மற்றும் மியான்மரில் ஊக்குவிப்பு திட்டத்திற்கான நிகழ்ச்சியை நடத்த உள்ளது.
APEDA
இது அனைத்து வேளாண் உற்பத்தி பொருட்களையும் உள்ளடக்கியுள்ள அட்டவணைப் பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்காகவும் மேம்படுத்துவதற்காகவும் ஏற்படுத்தப்பட்ட சட்டப்பூர்வ உச்ச ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையமாகும்.
APEDA மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகத்தின் (Ministry of Commerce and Industry) கீழ் செயல்படுகிறது.