TNPSC Thervupettagam

‘பங்களா’ என்று மாநிலத்தின் பெயரை மாற்றத் தீர்மானம்

July 28 , 2018 2187 days 651 0
  • மேற்கு வங்காள மாநில சட்ட மன்றமானது மாநிலத்தின் பெயரை ‘பங்களா’ என்று பெங்காளி, ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் மாற்றத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
  • இத்தீர்மானம் எப்பொழுது மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதி பெற்று, பாராளுமன்றம் இது தொடர்பாக சட்டம் இயற்றும் போது இப்பெயர் மாற்றம் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரும்.
  • ஆகஸ்ட் 2016 முதல் இத்தீர்மானம் நிலுவையில் உள்ளது. ஆகஸ்ட் 2016-இல் மேற்கு வங்காள சட்டமன்றமானது ஆங்கிலத்தில் ‘பெங்கால்’ என்றும் வங்க மொழியில் ‘பங்களா’ என்றும் இந்தியில் ‘பங்காள்’ என்றும் பெயர் மாற்றத் தீர்மானத்தை நிறைவேற்றியது.
  • 2017 ஆம் ஆண்டு வெவ்வேறு மொழிகளில் வெவ்வேறு பெயர்கள் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அரசு அத்தீர்மானத்தை நிராகரித்தது.
  • 2011 ஆம் ஆண்டு மேற்கு வங்காளத்தின் பெயரை ‘பஸ்ச்சிம் பங்கோ’ என்று மாற்ற அப்போதைய மம்தா பானர்ஜி தலைமையிலான அரசாங்கம் முயற்சி செய்தது. ஆனால் அப்போதைய மத்திய அரசாங்கம் அப்பரிந்துரையை நிராகரித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்