TNPSC Thervupettagam

பங்களா ஷஷ்யா பீமா - மேற்கு வங்காளம்

July 1 , 2019 1848 days 645 0
  • மேற்கு வங்காள அரசானது 2019 ஆண்டின் காரீஃப் பருவத்திற்கான பயிர் காப்பீட்டுத் திட்டத்தை இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனத்துடன் இணைந்து அறிவித்துள்ளது.
  • பங்களா ஷஷ்யா பீமா என்றழைக்கப்படும் இந்தத் திட்டமானது 15 மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கும் பொருந்தும்.
  • முழு காப்பீட்டுத் தொகையையும் அரசே செலுத்துவதால் இந்த பயிர்க் காப்பீட்டுத் திட்டமானது விவசாயிகளுக்கு முற்றிலும் இலவசமாகும்.
  • அமன் நெல், அவுஸ் நெல், சணல் மற்றும் சோளம் ஆகியவை இந்தக் காப்பீட்டின் கீழ் வரும் பயிர்களாகும்.
  • நடவு செய்யும் செய்யும் போதும், சாகுபடியின் போதும், அறுவடை செய்த பின்னர் பயிர் வயலில் இருக்கும் போதும், மோசமான வானிலை சூழ்நிலைகளின் போதும் என 4 நிலைகளில் இந்தக் காப்பீடானது அளிக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்