TNPSC Thervupettagam

பசிபிக் ஆசிய பயண கூட்டமைப்பு - தங்க விருதுகள்

September 17 , 2018 2164 days 649 0
  • கேரள சுற்றுலாத் துறை தனது புத்தாக்க விளம்பர பிரச்சாரத்துக்காக புகழ்பெற்ற பசிபிக் ஆசிய பயண கூட்டமைப்பின் இரண்டு தங்க விருதுகளைப் பெற்றுள்ளது (PATA - Pacific Asia Travel Association).
  • PATA-வின் பயண அச்சு விளம்பரம் மற்றும் பயண விளம்பர தட்டி வகைகளின் கீழ் முறையே ‘யெல்லா கேரளா’ அச்சு பிரச்சாரம் மற்றும் நேரலையில் ஊக்குவிக்கும் விளம்பரத் தட்டிகளுக்காக கேரளா சுற்றுலாத் துறையால் இவ்விருதுகள் வென்று எடுக்கப் பெற்றுள்ளன.
    • யெல்லா கேரளா - வளைகுடா நாடுகளில் அச்சு ஊடக பயண விளம்பர பிரச்சாரம் தொடங்கப்பட்டது.
    • நேரலையில் ஊக்குவிக்கும் விளம்பர தட்டிகள் - “கொச்சி - முசிரிஸ் பையேன்னெலெ”-வின் 3வது பதிப்பிற்காக வடிவமைக்கப்பட்டது (KMB - Kochi Muziris Biennale).
  • பிரச்சாரம் மற்றும் விளம்பரத் தட்டிகள் ஆகிய இரண்டும் கேரளா சுற்றுலாத் துறையின் விளம்பர நிறுவனமான ஸ்டார்க் கம்யூனிகேஷன்ஸ் என்ற நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்