TNPSC Thervupettagam

பசிபிக் பிராந்திய அளவிலான ஒப்பந்தத்தில் பிரிட்டன் இணைவு

April 8 , 2023 470 days 200 0
  • 11 நாடுகள் அடங்கிய பசிபிக் பிராந்திய அளவிலான கூட்டாண்மைக்கான விரிவான மற்றும் முற்போக்கு ஒப்பந்தத்தில் (CPTPP) இணைவதற்கு ஐக்கியப் பேரரசு ஒப்புதல் அளித்துள்ளது.
  • ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய பிறகு, அந்தப் பிராந்தியத்தில் உள்ள நாடுகளுடனான உறவுகளை அதிகரிக்கச் செய்யவும், அதன் உலகளாவிய வர்த்தக இணைப்புகளை மேம்படுத்தவும் ஐக்கிய இராட்சியம் முயல்கிறது.
  • CPTPP என்பது முந்தைய பசிபிக் பிராந்திய அளவிலான வர்த்தக ஒப்பந்தத்தின் வழியே அடுத்ததாக உருவாக்கப்பட்ட ஒரு ஒப்பந்தம் ஆகும்.
  • இதன் உறுப்பினர்களில் G7 அமைப்பின் சக உறுப்பினர்களான கனடா மற்றும் ஜப்பான், மற்றும் ஐக்கிய இராட்சியத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க நட்பு நாடுகளான ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகியவை அடங்கும்.
  • இதர உறுப்பினர்கள் பட்டியலில் மலேசியா, சிங்கப்பூர், வியட்நாம் மற்றும் புருனே ஆகிய நாடுகளுடன் சேர்த்து மெக்சிகோ, சிலி மற்றும் பெரு ஆகியவையும் அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்