பசிபிக் பிராந்திய அளவிலான ஒப்பந்தத்தில் பிரிட்டன் இணைவு
April 8 , 2023 599 days 251 0
11 நாடுகள் அடங்கிய பசிபிக் பிராந்திய அளவிலான கூட்டாண்மைக்கான விரிவான மற்றும் முற்போக்கு ஒப்பந்தத்தில் (CPTPP) இணைவதற்கு ஐக்கியப் பேரரசு ஒப்புதல் அளித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய பிறகு, அந்தப் பிராந்தியத்தில் உள்ள நாடுகளுடனான உறவுகளை அதிகரிக்கச் செய்யவும், அதன் உலகளாவிய வர்த்தக இணைப்புகளை மேம்படுத்தவும் ஐக்கிய இராட்சியம் முயல்கிறது.
CPTPP என்பது முந்தைய பசிபிக் பிராந்திய அளவிலான வர்த்தக ஒப்பந்தத்தின் வழியே அடுத்ததாக உருவாக்கப்பட்ட ஒரு ஒப்பந்தம் ஆகும்.
இதன் உறுப்பினர்களில் G7 அமைப்பின் சக உறுப்பினர்களான கனடா மற்றும் ஜப்பான், மற்றும் ஐக்கிய இராட்சியத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க நட்பு நாடுகளான ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகியவை அடங்கும்.
இதர உறுப்பினர்கள் பட்டியலில் மலேசியா, சிங்கப்பூர், வியட்நாம் மற்றும் புருனே ஆகிய நாடுகளுடன் சேர்த்து மெக்சிகோ, சிலி மற்றும் பெரு ஆகியவையும் அடங்கும்.