TNPSC Thervupettagam

பசிபிக் பெருமுயற்சி – 2018

August 11 , 2018 2299 days 681 0
  • பன்னாட்டு தொலைத் தொடர்புக்காக இணைந்து செயலாற்றும் திட்டத்தின் (Multinational Communications Interoperability Program – MCIP) கீழ் தொலைத் தொடர்புப் பயிற்சியான “பசிபிக் பெருமுயற்சி – 2018” (Pacific Endeavor - 2018 – PE-18) நேபாளத்தின் காத்மண்டுவில்  ஆகஸ்ட் 6, 2018 அன்று தொடங்கியது.
  • இந்த 12 நாள் பயிற்சியின் முக்கிய குறிக்கோள் : ஆசிய பசிபிக் பகுதிகளில் பேரழிவு நேரங்களில் விழிப்புணர்வுடன் ஒருங்கிணைந்து செயல்பட இராணுவப் படைகளுக்கு பொதுவான தொலைத் தொடர்பு இயங்கு முறைகளை செயல்படுத்துவதே ஆகும்.
  • இப்பயிற்சி நேபாள இராணுவம் மற்றும் அமெரிக்காவின் பசிபிக் தலைமை (United States Pacific Command – USPC) ஆகியவற்றின் இணைந்த முயற்சியாகும்.
  • பசிபிக் பெருமுயற்சி 2005-ல் தொடங்கியது. மேலும், இது உடனடி மற்றும் பயனுள்ள விதத்தில் தொலைத் தொடர்புகளுக்கிடையேயான அமைப்பு முறைகளை பேரழிவு நிவாரண நடவடிக்கைகளின் போது இணைந்து செயலாற்றுவதில் கவனம் செலுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்