உலகம் முழுவதும் 2030 ஆம் ஆண்டில் பசியை ஒழிப்பதற்கு எடுக்கப்படும் முயற்சிகளுக்கு உதவுவதற்காக ஐ.நா.வின் உலக உணவுத் திட்டம் (UN’s World Food Programme - WFP) மற்றும் சீனாவின் இணைய வழி வணிக நிறுவனமான அலிபாபா குழுமம் ஆகியவை இணைந்து யுக்தி சார்ந்த கூட்டாண்மையை உருவாக்கியுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி, அலிபாபா குழுமத்தின் க்ளவுட் கம்பியூட்டிங் (அ) மேகக் கணினிப் பிரிவான அலிபாபா க்ளவுடானது டிஜிட்டல் முறையிலான “உலக பசி வரைபடத்தை” உருவாக்க உலக உணவுத் திட்டத்துடன் இணைந்து பணியாற்றவிருக்கிறது.
உலகத்தில் பசியால் வாடுபவர்கள் மற்றும் அதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் ஆகியவற்றை கண்காணிக்க இந்த வரைபடம் உதவும். 2030 ஆம் ஆண்டில் உலகெங்கிலும் பசியை ஒழிப்பது ஐ.நா.வின் நீடித்த வளர்ச்சி இலக்குகளில் ஒன்றாகும்.
மேலும் அவசர காலங்களில் எதிர்வினையாற்றுவதற்கான நேரத்தை குறைப்பதையும் பணியின் செயல்திறனை அதிகரிப்பதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.