TNPSC Thervupettagam

பசி நிலையைப் போக்குவதற்கான நிதி வழங்கீட்டில் உள்ள இடைவெளி பற்றிய அறிக்கை 2023

March 21 , 2023 486 days 249 0
  • "2023 ஆம் ஆண்டு பசி நிலையைப் போக்குவதற்கான நிதி வழங்கீட்டில் உள்ள இடைவெளி பற்றிய அறிக்கை: உலக நாடுகளின் பசி நெருக்கடியை நிறுத்துவதற்கு என்ன நடவடிக்கை தேவை" என்ற தலைப்பிலான ஒரு அறிக்கையானது பசி நிலைக்கு எதிரான நடவடிக்கை (Action Against Hunger) என்ற ஒரு அமைப்பினால் சமீபத்தில் வெளியிடப் பட்டது.
  • இந்த அறிக்கையின்படி, கடுமையான பசி நெருக்கடிகளை எதிர்கொள்ளும் நாடுகள் ஒப்பீட்டளவில் குறைவான அளவில் பசி நெருக்கடிகளைக் கொண்ட நாடுகளை விட குறைவான நிதியையே பெற்றுள்ளன.
  • 2022 ஆம் ஆண்டில் பசி நிலையைப் போக்குவதற்கான நிதி வழங்கீட்டில் 53% அளவில் இடைவெளி இருப்பதாக இந்த அறிக்கை குறிப்பிட்டது.
  • பசி நிலையைப் போக்குவதற்கான திட்டங்களின் தேவைகளில் 3 சதவீதம் மட்டுமே முழுமையாக நிதியளிக்கப்பட்டது.
  • கூடுதல் நிதிக்கான 65 சதவீத வேண்டுகோள்களில் பாதியளவு கூட நிறைவேற்றப் படவில்லை.
  • உலக நாடுகளின் பசி நிலையினைப் போக்குவதற்கான நடவடிக்கைகளின் தேவைகளில் 47% ஆனது ஐக்கிய நாடுகள் சபையின் நிதி மூலம் பூர்த்தி செய்யப் படுகிறது.
  • எனவே, பசி நிலையைப் போக்குவதற்கான நிதி வழங்கீட்டில் உள்ள இடைவெளி ஆனது 53% ஆக உள்ளது.
  • 2021 ஆம் ஆண்டில் 828 மில்லியன் மக்கள் பட்டினியால் பாதிக்கப் பட்டுள்ளனர்.
  • இது முந்தைய ஆண்டை விட 46 மில்லியனும், 2019 ஆம் ஆண்டில் இருந்த அளவை விட 150 மில்லியனும் அதிகமாகும்.
  • உலக நாடுகளில் உள்ள பசி நெருக்கடியை முடிவுக்குக் கொண்டு வர 4 பில்லியன் அமெரிக்க டாலர் நிதி தேவைப்படுகிறது.
  • மொசாம்பிக் மற்றும் கென்யா ஆகிய நாடுகள் ஆப்கானிஸ்தான் மற்றும் ஹைதி ஆகிய நாடுகளை விட 32% அதிக நிதியைப் பெற்றுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்