2020 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் தேதியன்று 7.5 ரிக்டர் அளவு கொண்ட நிலநடுக்கமானது வடக்கு பசிபிக்கைத் தாக்கியது.
இந்த நிலநடுக்கமானது கடலுக்கடியில் 37 மைல்கள் ஆழத்தில் ஏற்பட்டு, ரஷ்யாவின் குரில் தீவுகளைத் தாக்கியது.
இது பசிபிக் பெருங்கடலில் இருந்து ஓகோட்ச்க் என்ற கடலைப் பிரிக்கின்ற ஒரு எரிமலைத் தீவுக் கூட்டங்களைச் சேர்ந்ததாகும்
இந்தத் தீவுகள் தற்பொழுது ரஷ்யாவினால் நிர்வகிக்கப் படுகின்றன.
இருப்பினும், இந்தத் தீவுக் கூட்டங்களின் தெற்கில் உள்ள 4 தீவுகளின் மீதான ஜப்பானின் உரிமைக் கோருதலானது தற்பொழுது நடைபெற்று வரும் குரில் தீவுகள் பிரச்சினைக்கு இட்டுச் சென்றுள்ளது.
இந்தத் தீவுகள் மேலோட்டு இயக்க நிலைப்புத் தன்மையற்ற பகுதியான “நெருப்பு வளையத்தில்” அமைந்துள்ளது.
நெருப்பு வளையம் என்பது பல்வேறு எரிமலை வெடிப்புகள் மற்றும் நிலநடுக்கங்கள் நிகழும் பசிபிக்கில் உள்ள ஒரு பகுதியாகும்.