TNPSC Thervupettagam

பசுமைக் கடன் வழங்கீட்டுத் திட்டத்தினை செயல்படுத்துதல்

April 19 , 2024 250 days 318 0
  • மத்தியப் பிரதேசமானது மத்திய அரசின் பசுமைக் கடன் வழங்கீட்டுத் திட்டத்தினைச் செயல்படுத்துவதில் முன்னணியில் உள்ளது.
  • கடந்த இரண்டு மாதங்களில் 10 மாநிலங்களில் 4,980 ஹெக்டேர் பரப்பளவில் 500க்கும் மேற்பட்ட நிலப் பகுதிகளில் மரங்களை நடுவதற்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
  • இந்த மாநிலங்கள் மற்ற மூன்று மாநிலங்களுடன் சேர்ந்து, இந்தத் திட்டத்திற்காக 10,000 ஹெக்டேர் பரப்பிலான நிலப் பகுதியினை அடையாளம் கண்டுள்ளன.
  • மத்தியப் பிரதேசமானது, இதுவரையில், தோட்டமாக்குதல்/பசுமைப்படுத்தல் போன்ற நடவடிக்கைகளுக்காக என்று அங்கீகரிக்கப்பட்ட 954 ஹெக்டேர் வளமிழந்த வன நிலத்தினைப் பதிவு செய்துள்ளது.
  • அதனைத் தொடர்ந்து தெலங்கானா (845 ஹெக்டேர்), சத்தீஸ்கர் (713 ஹெக்டேர்), குஜராத் (595 ஹெக்டேர்) மற்றும் அசாம் (454 ஹெக்டேர்) ஆகிய மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்