TNPSC Thervupettagam

பசுமை ஆற்றல் வழித்தடத் திட்டம்-II

November 23 , 2024 17 hrs 0 min 28 0
  • மத்திய மின்சார ஆணையம் (CEA) தேசிய மின் பகிர்மானத் திட்ட அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
  • இரண்டாம் கட்ட பசுமை ஆற்றல் வழித்தடத் திட்டத்தின் (GEC-II) கீழ் தமிழ்நாட்டிற்கு 719.76 கோடி ரூபாய் செலவில் மின் பகிர்மானக் கட்டமைப்பினை அமைக்க திட்டமிடப் பட்டுள்ளது.
  • இந்தத் திட்டத்தின் கீழ், சுமார் 19 ஜிகாவாட் (GW) அளவிலான புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறன் ஆனது மாநிலங்களுக்குள் பகிர்மான அமைப்பில் ஒருங்கிணைக்கப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
  • தமிழ்நாட்டில், கூடுதலாக சுமார் 4,000 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் உற்பத்தியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • இது 624 சுற்று கிலோமீட்டர்கள் (CKM) அளவிலான மின் பகிர்மான வடங்கள் மற்றும் 2,200 துணை மின்நிலையங்களை (MVA) இலக்காகக் கொண்டுள்ளது.
  • பசுமை ஆற்றல் வழித்தடம்-I (GEC-I) என்ற திட்டத்தின் கீழ், சுமார் 23 GW அளவிலான புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறன் என்பது உள்-மாநில வலையமைப்புகளுடன் நன்கு ஒருங்கிணைக்கப் பட திட்டமிடப்பட்டது.
  • சுமார் 18.72 ஜிகாவாட் (31 மார்ச், 2024 வரை) திறன் ஆனது வலையமைப்புடன் நன்கு ஒருங்கிணைக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்