TNPSC Thervupettagam

பசுமை இந்தியா என்ற திட்டத்திற்கு ஆதரவு வழங்குவதற்கான உறுதிப்பாட்டு அறிக்கை

November 24 , 2021 970 days 425 0
  • இந்திய ரிசர்வ் வங்கியானது சமீபத்தில் இந்த அறிக்கையை வெளியிட்டது.
  • நிதி அமைப்பினைப் பசுமை மயமாக்குவதற்கான ஒரு கட்டமைப்பிற்கு இந்திய ரிசர்வ் வங்கி ஆதரவளிப்பதாக இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
  • இந்திய ரிசர்வ் வங்கியானது 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 அன்று நிதி அமைப்பினைப் பசுமை மயமாக்குவதற்கான கட்டமைப்பில் (Network for Greening the Financial System – NGFS) உறுப்பினராக இணைந்தது.
  • NGFS (Network for Greening the Financial System) என்பது 83 மத்திய வங்கிகள் மற்றும் நிதி கண்காணிப்பு அமைப்புகளை உள்ளடக்கிய ஒரு கட்டமைப்பாகும்.
  • நிதி அமைப்பினைப் பசுமை மயமாக்குவதை துரிதப்படுத்துவதையே இந்தக் கட்டமைப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • பருவநிலை மாற்றம் தொடர்பாக மத்திய வங்கிகள் ஆற்ற வேண்டிய பங்குகள் குறித்த பரிந்துரைகளை உருவாக்கவும் இது விழைகிறது.
  • இதன் செயலகமானது பாங்க் டி பிரான்ஸ் என்ற வங்கியினால் செயல்படுத்தப் படுகிறது.
  • டச்சு சென்ட்ரல் பேங்கர் எல்டர்சன் என்பது தான் NGFS கட்டமைப்பின் தற்போதையத் தலைமை ஆகும்.
  • NGFS ஆனது 2017 ஆம் ஆண்டில் பாரீஸ் நகரில் நடைபெற்ற ‘ஒற்றைக் கோள் உச்சி மாநாட்டில்’ அறிவிக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்