ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த முன்மொழிவானது எளிமையான ஒழுங்குமுறைக் கட்டமைப்பை உருவாக்குதல், நிதிகளுக்கான விரைவான அணுகலை வழங்குதல், திறன்களை மேம்படுத்துதல் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக வலை அமைப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கியது.
அமெரிக்கா தனது பணவீக்கக் குறைப்புச் சட்டத்தை அறிவித்த சில மாதங்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டது.
இது அமெரிக்க நிறுவனங்களின் உற்பத்திக்கான ஊக்கத் தொகைகளுடன் கூடிய பருவநிலை மாற்ற திட்டங்கள் , தூய்மையான எரிசக்திக்கான பில்லியன் கணக்கான டாலர் வரிக் குறைப்புகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.