TNPSC Thervupettagam

பசுமை கண்துடைப்பு வழிகாட்டுதல்கள்

October 21 , 2024 35 days 76 0
  • மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையமானது (CCPA), பசுமை கண்துடைப்பு அல்லது தவறான சுற்றுச்சூழல் காப்பு கோரல்களைத் தடுப்பதற்கும் அவற்றை ஒழுங்குமுறைப் படுத்துவதற்குமான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
  • அதன் வழிகாட்டுதல்கள் தயாரிப்புகள் அல்லது சேவைகளுக்கான விளம்பரங்களில் பசுமை கண்துடைப்பு செய்யப்பட்டுவதைத் தடுக்கும்.
  • 2022 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட, பல்வேறு தவறான தகவல்களை அளிக்கும் விளம்பரங்களைத் தடுப்பதற்கும், தவறான விளம்பரங்களுக்கு ஒப்புதல் அளிப்பதைத் தடுப்பதற்காகவும் தற்போதுள்ள வழிகாட்டுதல்களை இந்தப் புதிய விதிமுறைகள் நன்கு பூர்த்தி செய்யும்.
  • பசுமை கண்துடைப்பு என்பது நிறுவனங்கள், அமைப்புகள் அல்லது நாடுகள் தனது செயல்பாடுகள், தயாரிப்புகள் அல்லது சேவைகள் சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாகவோ அல்லது பருவநிலைக்கு நன்கு ஏற்றதாகவோ இருப்பதாக நம்பமுடியாத அல்லது சரி பார்க்கப் படாத உரிமைகோரல்களை உருவாக்கும் போக்கைக் குறிக்கிறது.
  • "தூய்மையானது", "பசுமை முறையில் தயாரிக்கப்பட்டது", "சுற்றுச்சூழலுக்கு உகந்தது", "புவிக்கு தீங்கற்றது", "விலங்குகள் மீது பரிசோதிக்கப்படாதது", "கார்பன் நடுநிலைத் தன்மை கொண்டது", "இயற்கையானது", "கரிமமற்றது", "சுற்றுச் சூழலுக்கு தீங்கற்றது" அல்லது இது போன்ற பொதுவான சொற்கள், அந்த நிறுவனத்தினால் அந்தக் கோரல்களை பெரும் ஆதாரத்துடன் நிரூபிக்க முடிந்தால் மட்டுமே ஒரு தயாரிப்புக்கான விளக்க விவரங்களில் பதிவிட அனுமதிக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்