பசுமை சார் கல்விக்கான யுனெஸ்கோவின் புதிய செயற்கருவிகள்
June 14 , 2024 163 days 203 0
UNESCO அமைப்பின் பசுமை சார் கல்விக் கூட்டாண்மையின் கீழ் பசுமை சார் பாடத் திட்ட வழிகாட்டுதல் (GCG) மற்றும் பசுமை சார் பள்ளி தரத் தரநிலைகள் (GSQS) ஆகியவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது பருவநிலை சார்ந்த கல்வி எதைக் கொண்டிருக்க வேண்டும் மற்றும் பாடத் திட்டங்களில் சுற்றுச்சூழலைப் பற்றிய கருத்துக்களை உலக நாடுகள் எவ்வாறு பிரதானப் படுத்தலாம் என்பது பற்றிய பொதுவான புரிதலை வழங்கும் ஒரு செயல் முறை கையேடுயாகும்.
கொள்கை வகுப்பாளர்கள், கல்வி அமைச்சகங்கள், கல்வியாளர்கள், கற்பவர்கள் மற்றும் சமூகங்கள் இந்தத் திட்டத்தின் இலக்காக நிர்ணயிக்கப்பட்டவர்கள் ஆவர்.
யுனெஸ்கோ அமைப்பின் சமீபத்தியக் கணக்கெடுப்பில் 100 நாடுகளில் 50% நாடுகள் தங்கள் பாடத் திட்டத்தில் பருவநிலை மாற்றம் பற்றி குறிப்பிடவில்லை.
சுமார் 70% இளைஞர்களால் பருவநிலை சீர்குலைவு பற்றி விளக்க முடியவில்லை.