TNPSC Thervupettagam

பசுமை பட்டு மேம்பாட்டுத் திட்டம்

May 17 , 2018 2385 days 803 0
  • மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாறுபாட்டு அமைச்சகம் முழு அளவிலான பசுமை பட்டு மேம்பாட்டு திட்டத்தை தொடங்கியுள்ளது.
  • நீடித்த பாதுகாப்பு மற்றும் இயற்கை வளங்களின் மேலாண்மை ஆகியவற்றிற்காக 2021ல் 30 வகையான படிப்புகள் வழியாக நாட்டிலுள்ள சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையிலுள்ள5 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு பயிற்சியளிப்பதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இத்திட்டத்தின் கீழ் அதிகளவிலான தகவல்களை பெறுவதற்கும், பல்வேறு வகையான படிப்புகளுக்கு வின்னப்பிதற்கும் வேண்டி GSDP ENVIS என்ற கைபேசி செயலி தொடங்கப்பட்டுள்ளது. 2017ம் ஆண்டில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாறுபாட்டு அமைச்சகத்தால் தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனத்துடன் கூட்டிணைந்து சோதனை முயற்சியாக பசுமை பட்டு மேம்பாட்டுத் திட்டமானது துவங்கப்பட்டது.
  • இத்திட்டம் தொழில்நுட்ப அறிவு மற்றும் நீடித்த வளர்ச்சிக்கான அர்ப்பணிப்பு உணர்வைக் கொண்ட பசுமை திறன்கொண்ட பணியாளர்களை உருவாக்குவதற்காக தொடங்கப்பட்டது.
  • இத்திட்டம், தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகள், நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகள், தேசிய உயிரிபல்வகை இலக்குகள் மற்றும் கழிவு மேலாண்மை விதிகள் 2016 ஆகியவற்றை அடைவதற்கு உதவி புரியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்