TNPSC Thervupettagam

பசுமை மகாநதித் திட்டம்

July 27 , 2018 2185 days 842 0
  • ஒடிசா மாநில அரசானது ‘பசுமை மகாநதித் திட்டத்தின் கீழ்’ மகாநதி ஆறு மற்றும் அவற்றின் துணையாறுகள் ஆகியவற்றின் நெடுகிலும் 2 கோடி மரக்கன்றுகளை நடும் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
  • இத்திட்டத்தை அம்மாநிலத்தின் காடுகள், தோட்டக் கலை மற்றும் ஆற்றுப்பள்ளத்தாக்கு வளர்ச்சி ஆகிய துறைகள் இணைந்து செயல்படுத்துகிறது.
  • இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆற்றின் ஓரங்களில் மண் அரிப்பைத் தடுத்தல் மற்றும் நிலத்தடி நீர்வளத்தைப் புதுப்பித்தல் ஆகும்.
  • மகாநதி ஆறு சத்தீஸ்கர் மாநிலத்தில் மேட்டு நிலத்தில் தொடங்கி ஓடைகளின் வழியே பாய்ந்து வங்காள விரிகுடாவில் சென்று கலக்கிறது.
  • மகாநதி ஆற்றின் இடப்பக்க துணையாறுகள்: சிவநாத், மாண்ட், இப், ஹெஸ்டியோ ஆகும். இவற்றின் வலப்பக்க துணையாறுகள்: ஓங், பாரி ஆறு, ஜோங்க் மற்றும் டெலின் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்