பசுமை மதிப்பீடு திட்டத்தின் கீழ் நிலங்கள் மறுசீரமைப்பு
May 5 , 2024 203 days 305 0
தமிழ்நாட்டில் மொத்தம் 263.4 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள 13 தரமிழந்த நிலங்கள் பசுமை மதிப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மறுசீரமைக்கப்படவுள்ளது.
இந்தத் திட்டமானது ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சகத்தினால் தொடங்கப்பட்டுள்ளது.
இது தனிநபர்கள், சமூகங்கள், தனியார் துறை தொழில்கள் மற்றும் நிறுவனங்களால் பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்படும் தன்னார்வ ரீதியின் அடிப்படையிலான சுற்றுச்சூழல் நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட சந்தை அடிப்படையிலான நெறிமுறையாகும்.
பங்குதாரர்கள் தரமிழந்த நிலங்களை மறுசீரமைப்பதில் முதலீடு செய்வர், அதற்குப் பதிலாக, வன நிலத்தை வனம் அல்லாதப் பயன்பாட்டு நோக்கங்களுக்காக மாற்றும் நடவடிக்கைகளின் போது இழப்பீட்டு காடு வளர்ப்புக்குப் பயன்படுத்தக்கூடிய வகையிலான பசுமை மதிப்பீடுகளைப் பெறுவர்.
2,448.57 ஹெக்டேர் பரப்பளவிலான 101 நிலப் பகுதிகள் அடையாளம் காணப்பட்டு, பசுமை மதிப்பீட்டுப் பதிவேட்டிற்கான இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளன.
அதில் 13 (263.46 ஹெக்டேர்) பகுதிகள் அங்கீகரிக்கப் பட்டதோடு, 19 (150.84) பகுதிகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
இந்த அங்கீகரிக்கப்பட்ட நிலங்கள் திருவள்ளூர், சிவகங்கை, திண்டுக்கல், ஈரோடு, சேலம், மற்றும் தருமபுரி ஆகிய இடங்களில் அமைந்துள்ளன.