PREVIOUS
இந்திய இரயில்வேயானது இரயில் பாதையிலேயே நேரடியாக மின்சாரத்தை வழங்குவதற்காக வேண்டி மத்தியப் பிரதேசத்தின் பினாவில் ஒரு சூரிய ஆற்றல் ஆலையை அமைக்கின்றது.
இரயில்வே அமைச்சகமானது தனது பயன்படுத்தப்படாத காலி நிலங்களில் சூரிய ஆற்றல் ஆலைகளை அமைக்க முடிவு செய்துள்ளது.
சூரிய ஆற்றலின் பயன்பாடானது “நிகர சுழிய” கார்பன் உமிழ்வு கொண்ட இரயில்வேத் துறை என்ற இலக்கை அடைவதற்காக வேண்டி இரயில்வேயின் திட்டத்தின் ஒரு உந்து சக்தியாக இருக்கும்.
ஆற்றல் தன்னிறைவை அடைய இருக்கும் முதலாவது போக்குவரத்து அமைப்பு இந்திய இரயில்வேயாகும்.
இந்திய இரயில்வே மற்றும் பாரத் கனரக மிகுமின் நிறுவனம் ஆகியவை உலகில் தன்னளவில் இதே வகையைச் சேர்ந்த முதலாவது திட்டத்தைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளன.