TNPSC Thervupettagam

பசுமை விவசாயத் திட்டம்

July 31 , 2020 1452 days 625 0
  • மத்திய அரசானது மிசோரமில் பசுமை விவசாயத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
  • இது விவசாயத்திலிருந்து வரும் உமிழ்வுகளைக் குறைப்பதையும் நீடித்த வேளாண் நடைமுறைகளை உறுதிப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தத் திட்டமானது உயிரியல் பன்முகத் தன்மை, காலநிலை மாற்றம், நீடித்த நில மேலாண்மைக் குறிக்கோள்களை இந்திய வேளாண்மைக்குள் ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தத் திட்டமானது தம்பா புலிகள் காப்பகம் மற்றும் தொரங்லாங் வனவிலங்குச் சரணாலயம் உள்ளிட்ட மிசோர மாநிலப் பகுதிகளை உள்ளடக்கியுள்ளது.
  • இது உலக சுற்றுச்சூழல் வசதியினால் நிதியளிக்கப்படுகின்றது.
  • மத்திய வேளாண், கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத் துறையானது இதன் செயலாக்க நிறுவனமாகும்.
  • இதனைச் செயல்படுத்துவதில் ஈடுபட்டுள்ள மற்ற முக்கியமான அமைப்புகள் உணவு & வேளாண் அமைப்பு மற்றும் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சகம் ஆகியவையாகும்.
  • இந்தத் திட்டம் செயல்படுத்தப் படுவதில் ஈடுபட்டுள்ள 5 மாநிலங்களில் மிசோரமும் ஒன்றாகும்.
  • ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஒடிசா மற்றும் உத்தராகண்ட் ஆகியவை இதர மாநிலங்களாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்