TNPSC Thervupettagam

பசுமை ஹைட்ரஜன் எரிபொருளுக்கான வினையூக்கி

May 18 , 2023 430 days 209 0
  • குவஹாத்தியின் இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனமானது ஒரு மரத்தின் திரவ வடித்தல் மூலம் பெறப்படும் ஆல்கஹாலில் இருந்து, நிலைத்தன்மை மிக்க பசுமை ஹைட்ரஜன் எரிபொருளை உற்பத்தி செய்யக் கூடிய ஒரு வினையூக்கியை உருவாக்கி உள்ளது.
  • மேலும், இது கார்பன் டை ஆக்சைடை ஒரு துணை விளைவுப் பொருளாக உற்பத்தி செய்யாத வகையிலானதாகும்.
  • இந்த எளிதான மற்றும் சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பானச் செயல்முறையானது ஒரு பயனுள்ள தொழில்துறை இரசாயனமான ஃபார்மிக் அமிலத்தினை வெகுவாக உற்பத்தி செய்கிறது.
  • இது மெத்தனாலை ஒரு நம்பிக்கைக்குரிய திரவக் கரிம ஹைட்ரஜன் கடத்தியாக (LOHC) முன் வைப்பதோடு, ஹைட்ரஜன்-மெத்தனால் பொருளாதாரம் என்ற கருத்தாக்கத்திற்கு குறிப்பிட்டப் பங்கினை அளிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்