பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் கலனில் இயங்கும் பேருந்து
October 1 , 2023
422 days
321
- பசுமை ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் இந்தியாவின் முதல் பேருந்தினை இந்தியன் ஆயில் நிறுவனம் டெல்லியில் அறிமுகப்படுத்தியுள்ளது.
- பசுமை ஹைட்ரஜன் ஒரு நிலையான மாற்று எரிபொருள் ஆகும் என்பதோடு, மேலும் இது காற்றினை மாசுபடுத்தும் வாயுக்களை வெளியிடுவதில்லை.
- ஹைட்ரஜனின் எரிப்பு செயல்முறையின் போது நீராவி மட்டுமே துணைப் பொருளாக வெளிப் படுகிறது எனவே இதிலிருந்து மாசுபடுத்தும் வாயுக்கள் வெளியேறாது.
- 30 கிலோ கொள்ளளவு கொண்ட நான்கு எரிவாயு உருளைகள் இதில் பொருத்தப் பட்டு உள்ள இந்தப் பேருந்துகளை 350 கி.மீ. தூரம் வரை இயக்க முடியும்.
- இந்த நான்கு எரிவாயு உருளைகள் மீள்நிரம்ப 10 முதல் 12 நிமிடங்கள் மட்டுமே ஆகும்.
Post Views:
321