TNPSC Thervupettagam

பசுமை ஹைட்ரஜன் சூழலமைப்பிற்கானச் செயல்திட்டம்

July 21 , 2023 368 days 178 0
  • புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களின் அமைச்சகமானது, பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்வதற்கும் சேமிப்பதற்குமான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முன்னுரிமைகளை வரையறுப்பதற்கான முக்கிய வரைவு மற்றும் செயல் திட்டத்தினை வெளியிட்டுள்ளது.
  • இது திறம் மிக்க, பாதுகாப்பான, செலவு குறைந்த ஹைட்ரஜன் சேமிப்பு வசதியினை மேம்படுத்துவதையும், பரவலான அளவில் இது ஒரு தூய எரிசக்தி வள ஆதாரமாக ஏற்றுக் கொள்ளப் படுவதற்கு வழி வகுப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது
  • ஹைட்ரஜன் எரிபொருள் மின்கலன்கள், மேம்பட்ட தொழில்நுட்பத்திலான மின் கலன்கள் மற்றும் மீமின்தேக்கிகள் ஒருசேர இயக்கப்படுவதன் முக்கியத்துவத்தினை இது எடுத்துக் காட்டுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்