TNPSC Thervupettagam

பசுமை ஹைட்ரஜன் தரநிலைகள்

August 25 , 2023 330 days 183 0
  • புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சகமானது இந்திய நாட்டிற்கான பசுமை ஹைட்ரஜன் தரநிலைகளை அறிவித்துள்ளது.
  • இது 'பசுமை' என வகைப்படுத்தக் கூடிய ஹைட்ரஜன் உற்பத்திக்கான சில உமிழ்வு வரம்புகளை வரையறுத்துக் கூறுகிறது.
  • இதன் மூலம் பசுமை ஹைட்ரஜனுக்கான வரையறையைக் கொண்ட சில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக மாறியுள்ளது.
  • பசுமை ஹைட்ரஜனின் அளவீடு, அதன் அறிக்கையிடல், அதன் கண்காணிப்பு, உற்பத்தி இடத்திலேயான  சரிபார்ப்பு மற்றும் சான்றளிப்பு ஆகியவற்றிற்கான ஒரு விரிவான வழி முறையை இந்த அறிவிப்பு குறிப்பிடுகிறது.
  • அரசாங்கமானது, ஆண்டிற்கு 5 மில்லியன் மெட்ரிக் டன் (MMT) பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்யும் நோக்கத்துடன் இந்த ஆண்டின் தொடக்கத்தில் தேசியப் பசுமை ஹைட்ரஜன் திட்டத்தினைத் தொடங்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்