பூமியில் உள்ள மிகப்பெரிய மற்றும் அதிக எடை கொண்ட பாம்பு இனமான பச்சை அனகோண்டாவின் (ஆனைக் கொன்றான்) இதுவரையில் அறியப்படாத ஓர் இனத்தை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
பச்சை அனகோண்டா, நீண்ட காலமாக அமேசான் காடுகளில் காணப்படும் மிகவும் வலிமையான மற்றும் மர்மமான விலங்குகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
பச்சை அனகோண்டாக்கள் உலகின் கனமான பாம்புகள் மற்றும் நீளமானவையாகும்.
இவை பெரும்பாலும் தென் அமெரிக்காவில் உள்ள ஆறுகள் மற்றும் ஈரநிலங்களில் காணப் படுகின்றன.
வரலாற்றில் இதுவரையில், பச்சை அனகோண்டாக்கள் (இராட்சத அனகோண்டாக்கள் என்றும் அழைக்கப் படுகின்றன) உட்பட தற்போது நான்கு அனகோண்டா இனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
முதன் முறையாக கண்டறியப்பட்ட யூனெக்டெஸ் முரினஸ் என்ற இனமானது பெரு, பொலிவியா, பிரெஞ்சு கயானா மற்றும் பிரேசில் ஆகிய பல நாடுகளில் காணப் படுகின்றது.
அவை "தெற்கு பச்சை அனகோண்டா" என்ற பொதுவான பெயர் கொண்டு அறியப் படுகின்றன.
இரண்டாவது, புதிதாக அடையாளம் காணப்பட்ட இனமானது யூனெக்டெஸ் அகாயிமா அல்லது "வடக்கு பச்சை அனகோண்டா" என்று அறியப்படுகிறது.
இது ஈக்வெடார், கொலம்பியா, வெனிசுலா, டிரினிடாட், கயானா, சூரினாம் மற்றும் பிரெஞ்சு கயானா ஆகிய நாடுகளில் காணப்படுகின்றது.