TNPSC Thervupettagam

பச்சை அனகோண்டாவின் இரண்டு புதிய இனங்கள்

February 25 , 2024 145 days 226 0
  • பூமியில் உள்ள மிகப்பெரிய மற்றும் அதிக எடை கொண்ட பாம்பு இனமான பச்சை அனகோண்டாவின் (ஆனைக் கொன்றான்) இதுவரையில் அறியப்படாத ஓர் இனத்தை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • பச்சை அனகோண்டா, நீண்ட காலமாக அமேசான் காடுகளில் காணப்படும் மிகவும் வலிமையான மற்றும் மர்மமான விலங்குகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
  • பச்சை அனகோண்டாக்கள் உலகின் கனமான பாம்புகள் மற்றும் நீளமானவையாகும்.
  • இவை பெரும்பாலும் தென் அமெரிக்காவில் உள்ள ஆறுகள் மற்றும் ஈரநிலங்களில் காணப் படுகின்றன.
  • வரலாற்றில் இதுவரையில், பச்சை அனகோண்டாக்கள் (இராட்சத அனகோண்டாக்கள் என்றும் அழைக்கப் படுகின்றன) உட்பட தற்போது நான்கு அனகோண்டா இனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
  • முதன் முறையாக கண்டறியப்பட்ட யூனெக்டெஸ் முரினஸ் என்ற இனமானது பெரு, பொலிவியா, பிரெஞ்சு கயானா மற்றும் பிரேசில் ஆகிய பல நாடுகளில் காணப் படுகின்றது.
  • அவை "தெற்கு பச்சை அனகோண்டா" என்ற பொதுவான பெயர் கொண்டு அறியப் படுகின்றன.
  • இரண்டாவது, புதிதாக அடையாளம் காணப்பட்ட இனமானது யூனெக்டெஸ் அகாயிமா அல்லது "வடக்கு பச்சை அனகோண்டா" என்று அறியப்படுகிறது.
  • இது ஈக்வெடார், கொலம்பியா, வெனிசுலா, டிரினிடாட், கயானா, சூரினாம் மற்றும் பிரெஞ்சு கயானா ஆகிய நாடுகளில் காணப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்