பஞ்சாபில் இந்த ஆண்டில் தாளடி எரிப்பு நிகழ்வுகள் அதிக அளவில் உயர்ந்து உள்ளன.
பயிர்க் கழிவுகளை எரிக்கும் மக்களுக்கு எதிரான தடை மற்றும் நடவடிக்கைகள் (காற்று மாசுபாட்டைத் தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்துதல்) சட்டம், 1987 கீழ் ஒழுங்குபடுத்தப் படுகின்றன.
இது நவம்பர் மாதத்தில் கோதுமையைப் பயிரிடுவதற்கு நிலங்களைத் தயார்படுத்துவதற்காக விவசாயிகளால் பின்பற்றப்படும் ஒரு பொது நடைமுறை ஆகும். ஏனெனில் அங்கு நெல் அறுவடை மற்றும் கோதுமை விதைப்பு ஆகியவற்றிற்கு இடையே மிகக் குறைந்தகால அளவே உள்ளது.
தாளடி எரிப்பானது நுண்மத் துகள்களுடன் கார்பன் டை ஆக்ஸைடு, சல்பர் டை ஆக்ஸைடு, நைட்ரஜன் ஆக்ஸைடு போன்ற தீங்கு விளைவிக்கும் வாயுக்களின் உமிழ்வை ஏற்படுத்துகின்றது.
திறந்தவெளித் தாளடி எரிப்பானது மீத்தேன், கார்பன் மோனாக்சைடு, எளிதில் ஆவியாகும் கரிமப் பொருள் மற்றும் கார்சினோஜெனிக் பாலிசைக்ளிக் அரோமேடிக் ஹைட்ரோகார்பன்கள் போன்ற தீங்கு விளைவிக்கும் வாயுக்களைக் கொண்டு அதிக அளவிலான நச்சு மாசுபடுத்திகளை வளிமண்டலத்தில் உமிழ்கின்றது.
இறுதியாக இது பனிப்புகை ஏற்படக் காரணமாக அமையலாம்.
நிலப்பகுதியில் உமி எரிப்பானது மண்ணில் உள்ள ஊட்டச்சத்துகளை அழித்து, அதனை வளம் அற்றதாக மாற்றுகின்றது.
தாளடி எரிப்பினால் உற்பத்தி செய்யப்படும் வெப்பமானது மண்ணிற்குள் ஊடுருவி, ஈரப்பதம் மற்றும் பயனுள்ள நுண்ணுயிரிகளின் இழப்பிற்கு காரணமாக அமைகின்றது.
ஒரு புத்தாக்க முயற்சியானது கௌதன் என்ற பகுதியை அமைப்பதன் மூலம் சத்தீஸ்கர் மாநில அரசினால் மேற்கொள்ளப் பட்டுள்ளது.
ஒரு கௌதன் என்பது ஒவ்வொரு கிராமத்திலும் பொதுவில் உள்ள ஒரு பிரத்தியேக 5 ஏக்கர் நிலப்பகுதியாகும். மக்களின் நன்கொடைகளின் மூலம் அனைத்துத் தாளடிகளும் இங்கு சேகரிக்கப் படுகின்றது.
அதன் பிறகு, இது மாட்டுச் சாணம் மற்றும் இயற்கை நொதிகளைக் கலப்பதன் மூலம் கரிம உரமாக மாற்றப் படுகின்றது.