இந்திய ரிசர்வ் வங்கியானது பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு SWIFT செயல்பாடுகள் தொடர்பான ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களைப் பின்பற்றாததால் 2 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
SWIFT என்பது நிதி நிறுவனங்களின் பரிவர்த்தனைக்குப் பயன்படுத்தப்படும் உலகளாவிய அளவிலான செய்தித் தொடர்பு மென்பொருளாகும்.
SWIFT (Society for Worldwide Interbank Financial Telecommunications) என்பது உலகளாவிய வங்கிகளுக்கிடையேயான நிதி சார்ந்த தொலைத் தகவல் தொடர்பு சங்கம் என்பதன் சுருக்கமாகும்.
சர்வதேச நிதிப் பரிமாற்றத்திற்காக SWIFT குறியீடு பயன்படுத்தப்படுகிறது.