மாநிலங்களில் பஞ்சாயத்து அமைப்புகளுக்கான அதிகாரப் பகிர்வின் நிலை (2024)- ஆதார அடிப்படையிலான ஒரு தெரிவுநிலைத் தரவரிசை என்ற ஒரு அறிக்கையானது மத்திய பஞ்சாயத்து ராஜ் துறை இணை அமைச்சரால் வெளியிடப்பட்டது.
பஞ்சாயத்து அதிகாரப் பகிர்வு குறியீட்டின் (PDI) கீழ் அகில இந்திய அளவில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
கர்நாடகா (72.23) மற்றும் கேரளா (70.59) ஆகியவற்றிற்கு அடுத்தபடியாக தமிழ்நாடு 68.38 மதிப்பெண்களைப் பெற்றுள்ளது.
"செயல்பாடுகள்" என்ற பரிமாணத்தைப் பொறுத்தவரை, தமிழ்நாடு மாநிலம் 60.24 மதிப்பெண்களுடன் தேசிய அளவில் அதிக மதிப்பெண்ணைப் பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில், 12,525 கிராமப் பஞ்சாயத்துகள், 388 பஞ்சாயத்து ஒன்றியங்கள் மற்றும் 37 மாவட்டப் பஞ்சாயத்துகள் உள்ளன.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், 2021-22 ஆம் ஆண்டில் இந்த மாநிலத்தின் சொந்த வருவாயில் பஞ்சாயத்து அமைப்புகளின் வருவாயின் பங்கு 0.31% ஆக இருந்தது.
கேரளா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மூன்று தென் மாநிலங்கள் முறையே 2.84%, 2.42% மற்றும் 0.67% என்ற பங்குடன் அதிக பங்கைக் கொண்டிருந்தன.