பஞ்சாயத்து அமைப்புகளின் முன்னேற்றக் குறியீடு (PAI)
April 13 , 2025 10 days 54 0
இந்த முதல் பதிப்புக் குறியீடானது, நீடித்த நிலையான மேம்பாட்டு இலக்குகளை (SDGs) அடைவதற்கான செயல்திறன் மற்றும் முன்னேற்றத்தின் அடிப்படையில் சுமார் 2.16 லட்சத்திற்கும் மேற்பட்டப் பஞ்சாயத்து அமைப்புகளை தரவரிசைப்படுத்துகிறது.
PAI ஆனது, 9 கருத்துருக்களில் 566 தனித்துவமான தரவுப் புள்ளிகளைக் கொண்ட 435 தனித்துவமான உள்ளாட்சிக் குறிகாட்டிகளை (331 கட்டாயத் தேர்வு & 104 விருப்பத் தேர்வு) பயன்படுத்துகிறது.
இந்தக் குறிகாட்டிகளின் அடிப்படையில் பஞ்சாயத்து அமைப்புகளுக்கு, 0 முதல் 100 என்ற மதிப்பெண்கள் வழங்கப்பட்டதோடு அவை மேலும் சாதனைப் படைத்தவை (90-100), முன்னணியில் இருப்பவை (75-90), செயல்திறன் மிக்கவை (60-75), இலட்சியம் மிக்கவை (40-60) மற்றும் தொடக்கநிலையில் உள்ளவை (40க்குக் கீழே) ஆகிய ஐந்து பிரிவுகளுள் ஒன்றில் தரவரிசைப் படுத்தப்பட்டன.
இந்தியாவில் சுமார் 2.55 லட்சத்திற்கும் மேற்பட்டப் பஞ்சாயத்துகள் உள்ளன ஆனால் மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களின் உரிய சரிபார்ப்புக்குப் பிறகு இந்த 29 மாநிலங்கள் /ஒன்றியப் பிரதேசங்களில் 2.16 லட்சம் கிராமப் பஞ்சாயத்துகளிலிருந்து மட்டுமே தரவு பெறப்பட்டது.
2.16 லட்சம் பஞ்சாயத்துகளில், 699 முன்னணிப் பஞ்சாயத்துகளாகவும், 77,298 செயல் திறன் மிக்கவையாகவும், 1,32,392 இலட்சியமிகு பஞ்சாயத்துகளாகவும், 5,896 தொடக்க நிலைப் பஞ்சாயத்துகளாகவும் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
ஒரு முன்னணிப் பஞ்சாயத்துகளாக தரவரிசைப் படுத்தப்பட்ட 699 பஞ்சாயத்துகளில், 346 குஜராத்தைச் சேர்ந்தவை என்ற நிலையில் அதைத் தொடர்ந்து தெலுங்கானா (270) மற்றும் திரிபுரா (42) ஆகியவை இடம் பெற்றுள்ளன.
சாதனைப் படைத்தவை (90-100) பிரிவில் எந்த ஒரு பஞ்சாயத்தும் தரவரிசைப்படுத்தப் படவில்லை.