TNPSC Thervupettagam

பஞ்சாயத்து (பட்டியலிடப்பட்ட பகுதிகளை விரிவுப்படுத்தும்) சட்டம் – சத்தீஸ்கர்

November 26 , 2021 1003 days 1069 0
  • சத்தீஸ்கர் அரசானது 1996 ஆம் ஆண்டு பஞ்சாயத்து (பட்டியலிடப்பட்டப் பகுதிகளை விரிவுபடுத்தும்) சட்டத்தின் கீழ், 2021 ஆம் ஆண்டு சத்தீஸ்கர் பஞ்சாயத்து விதிமுறைகள் (பட்டியலிடப்பட்டப் பகுதிகளை விரிவுபடுத்துதல்) விதிகள் என்ற வரைவு விதிகளை உருவாக்கியுள்ளது.
  • PESA சட்டத்தின் விரிவாக்கம் Panchayat (Extension of the Scheduled Areas) Act, 1996 என்பது ஆகும்.
  • பட்டியலிடப்பட்டப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு கிராம சபைகள் மூலம் சுய நிர்வாகத்தை (தன்னாட்சியை) உறுதி செய்வதற்காக மத்திய அரசினால் இந்த சட்டமானது இயற்றப்பட்டது.
  • இந்தச் சட்டமானது பழங்குடியினச் சமூகத்தினர் மற்றும் பட்டியலிடப்பட்டப் பகுதிகளில் வாழும் மக்கள் தங்களது சொந்த தன்னாட்சி அரசு முறைகள் மூலம் அவர்களை நிர்வகிப்பதற்கு சட்ட ரீதியில் அவர்களது உரிமைகளை அங்கீகரிக்கிறது.
  • இயற்கை வளங்கள் மீது பழங்குடியினர் பாரம்பரியமாகக் கொண்டுள்ள சிலபல உரிமைகளையும் இது அங்கீகரிக்கிறது.
  • இந்த விதிகள் நிறைவேற்றப்பட்டால் PESA சட்டங்களைக் கொண்ட 7வது மாநிலமாக சத்தீஸ்கர் மாறும்.
  • PESA சட்டங்களை ஆறு மாநிலங்கள் (இமாச்சலப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, ராஜஸ்தான், குஜராத் , மகாராஷ்டிரா) நிறைவேற்றி இருக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்