ரஷ்யாவின் படகைக்கா என்ற பள்ளமானது அதன் தொலைதூரக் கிழக்குப் பகுதியில் அமைந்த சைபீரிய டைகாவில் (அதாவது போரியல் காடு) அமைந்துள்ளது.
இது மிக வேகமாக விரிவடைந்து வரும் 1 கிலோமீட்டர் (0.6 மைல்) அளவிலான ஒரு குழி ஆகும்.
அறிவியலாளர்கள் இதனை மாபெரும் சரிவுப் பகுதி என்று அழைக்கின்றனர்.
இந்த விரிவடையும் பள்ளமானது, இந்த நூற்றாண்டில் பூமியின் பருவநிலை மாறச் செய்வதால், பூமியின் புவியியலிலும் ஏற்படும் விரைவான மாற்றங்களை எடுத்துக் காட்டுகிறது.
இந்தச் செயல்முறைக்கு உட்படும் மண் சரிவதால், சுற்றியுள்ள மற்றும் கீழே உள்ள உறைந்த மண் பெருமளவில் வெளிப்படுவதால் உருகத் தொடங்கும்.
இது நிலப்பரப்பினை மேலும் சரிவடையச் செய்வதோடு, உறைபனி நிலப்பரப்பின் அளவு மற்றும் உறைபனி செயல்முறையின் வேகத்தினை அதிகரிக்கச் செய்கிறது.
படகைக்கா பள்ளம் ஆண்டுக்கு சுமார் 10 மீட்டர் (33 அடி) வரை விரிவடைகிறது.