TNPSC Thervupettagam
May 28 , 2024 52 days 151 0
  • நடந்து வரும் மக்களவைத் தேர்தலின்போது வாக்குச் சாவடிகள் வாரியான வாக்காளர்களின் எண்ணிக்கை விவரங்களைப் பதிவேற்றம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு (EC) உத்தரவிட வேண்டும் என்ற ஜனநாயகச் சீர்திருத்தங்களுக்கான சங்கத்தின் (ADR) கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
  • வேட்பாளர் அல்லது அவர்களின் முகவரைத் தவிர வேறு எவருக்கும் 17C படிவத்தினை வழங்க சட்டப்பூர்வ அதிகாரம் எதுவும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
  • 1961 ஆம் ஆண்டு தேர்தல் நடத்தை விதிகளின் கீழான படிவம் 17C, கீழ்க்காணும் பல தரவுகளை பதிவு செய்கிறது,
    • ஒவ்வொரு சாவடிக்கும் நியமிக்கப்பட்டுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை
    • ஒரு பகுதியில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை
    • வாக்களிக்க வேண்டாம் என்று முடிவு செய்த வாக்காளர்களின் எண்ணிக்கை
    • வாக்களிக்க அனுமதிக்கப்படாத வாக்காளர்களின் எண்ணிக்கை
    • பதிவு செய்யப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை (மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தில் இருந்து பெறப்பட்ட தரவு)
    • பதிவான வாக்குகளின் எண்ணிக்கையானது வாக்களிக்காதவர்களின் எண்ணிக்கையினைக் கழித்த பிறகு பெறப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கைக்குச் சமமாக இருப்பதைக் குறித்தல்
    • வாக்குச் சீட்டுகள் பற்றிய தரவு (பெறப்பட்டது, வழங்கப்பட்டது மற்றும் பயன்படுத்தப் படாதது/திரும்பப் பெறப்பட்டவை)
    • வாக்கு முத்திரைகள் பற்றிய தரவுகள் (வழங்கப்பட்ட/பயன்படுத்தப்பட்ட/திரும்பப் பெறப்பட்டவை).

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்