TNPSC Thervupettagam

படைகள் நிறம் மாற்றும் அணிவகுப்பு

June 12 , 2018 2358 days 692 0
  • பிரிட்டனின் நீண்ட நாள் அரசியான ராணி இரண்டாம் எலிசபெத்தின் பிறந்த நாளைக் குறிப்பிடும் விதமாக நடைபெற்ற வருடாந்திர அணி வகுப்பில் முதல் முறையாகக் கரடியின் தோலாலான தொப்பிக்கு பதிலாக தலைப்பாகை அணிந்த நபராக கோல்ட் ஸ்ட்ரீம் (Cold Stream) படையைச் சேர்ந்த 22 வயது சீக்கியர் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
  • படைகள் நிறம் மாற்றும் அணிவகுப்பில் கலந்து கொண்ட ஆயிரம் பிரிட்டிஷ் படை வீரர்கள் மத்தியில் கோல்ட் ஸ்ட்ரீம் படைப்பிரிவைச் சேர்ந்தவர் சரண்ப்ரீத் சிங் லால்.

  • லண்டனில் நடைபெறும் இந்த அணிவகுப்பு ராணியின் 92வது பிறந்த தினத்தை அலுவல் பூர்வமாக குறிப்பிடுகின்றது.
  • ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதத்தில் லண்டனின் குதிரைப் படை வீரர்களால் நடத்தப்படும் படையின் நிறம் மாற்றம் செய்யப்படும் இந்த அணிவகுப்பு 250 வருடங்களுக்கு மேலாக அரசரின் பிறந்த தினத்தைக் குறிப்பிடும் வகையில் நடத்தப்படுகின்றது.
  • இந்த அணி வகுப்பு பண்டைய போருக்குத் தயாராகும் நடைமுறைகளிலிருந்து தோன்றியது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்