படையெடுக்கும் அன்னிய உயிரினங்களை களையெடுக்க ஒரு குழு
January 13 , 2019 2144 days 715 0
சென்னை உயர் நீதிமன்றம் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள படையெடுக்கும் அன்னிய வகைத் தாவரங்களைக் களையெடுப்பதற்கு ஒரு தீர்வு கண்டிட ஒரு நிபுணர் குழுவை அமைத்திருக்கின்றது.
இந்த படையெடுக்கும் உயிரினங்கள் விவசாயம், வனம் மற்றும் நீர்நிலை ஆகிய உயிர்ச்சூழல் சீரழிவுகளை ஏற்படுத்துவதோடு பல்லுயிர்ப் பெருக்கத் தன்மையின் இழப்பிற்கான இரண்டாவது முக்கிய காரணியாகவும் கருதப்படுகிறது.
இந்த குழு சென்னையில் உள்ள தேசிய பல்லுயிர்ப் பெருக்க ஆணையத்தில் உள்ள படையெடுக்கும் உயிரினங்களுக்கான நிபுணர் குழுவின் தலைவரான செருகுரி ராகவேந்திர பாபு என்பவரால் தலைமை தாங்கப்படும்.