TNPSC Thervupettagam

படைவீரர் கொடிநாள் தினம் – டிசம்பர் 7

December 8 , 2017 2494 days 845 0
  • நாட்டையும், நாட்டின் கௌரவத்தையும் காக்க எல்லைகளில் போரிடும் இந்தியாவின் முப்படை வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக 1949-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும், டிசம்பர்-7 ஆம் தேதி இந்திய படைவீரர் கொடிநாள் கொண்டாடப்படுகின்றது.
  • பொது மக்களுக்கு சிறு கொடிகள் விநியோகித்து, அதன் வழி நன்கொடைகளைப் பெறுவதற்காக இத்தினம் கொண்டாடப்படுகின்றது.
  • இவ்வாறு படைவீரர் கொடி நாளில் திரட்டப்படும் நிதியானது,
  • ஓய்வு பெற்ற இராணுவத்தினர் மற்றும் அவர்களின் நலவாழ்வு மற்றும் மறு குடியேற்றம்,
  • பணியிலுள்ள நபர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் நலவாழ்வு
  • போர் இழப்புகள் மற்றும் புனரமைப்பு போன்றவற்றிற்குப் பயன்படுத்தப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்